முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனைக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட ரஷ்ய அதிபர் புடின் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஏவுகணை சோதனையை அடுத்து ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுகிழமை அன்று அமெரிக்கா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியது.

அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட சோதனையில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை சரியாக தாக்கியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான குறுகிய தூர ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தின் மூலம் இது போன்ற சோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்கா ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே அமெரிக்க ஏவுகணை சோதனை குறித்து ரஷ்யாவும், சீனாவின் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டனர்.

இது தொடர்பான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவின் சோதனைகளுக்கு ரஷ்யா கண்டனமும் தெரிவித்தது. இதே போன்று ரஷ்யாவுடனான கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கான தடை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை மிண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். ரஷ்ய நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து