ஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Jetley-Virat Kohli 2019 08 24

மும்பை : அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் நேற்று  காலமானார். அருண் ஜெட்லி, அரசியலில் மட்டும் ஆர்வம் காட்டாமல் விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராக 2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அருண் ஜெட்லி, ஐ.பி.எல். மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில் அப்பொறுப்பில் இருந்து விலகினார். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராகவும் அருண் ஜெட்லி பொறுப்பு வகித்துள்ளார்.

அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளன்று இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளர். விராட் கோலி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

அருண் ஜெட்லியின் மறைவு செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. சிறந்த நபரான அருண் ஜெட்லி, எப்போதும் அனைவருக்கும் உதவ தயாராக இருப்பவர். 2006-ம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது, எனது இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு இரங்கல் தெரிவித்துச் சென்றார். அருண் ஜெட்லியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து