முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வடபழனியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை வடபழனியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் விபத்துக்குள்ளான போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவர்களின் குடும்பத்தில் வாரிசு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் .எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், வடபழனி பேருந்து பணிமனையில் கடந்த ஜூலை 28-ம் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கட்டிட சுவர் மீது மோதி, சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் இருந்த மாநகர போக்குவரத்துப் பணியாளர்களான சென்னையைச் சேர்ந்த கே. சேகர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாரதி ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற செய்தியைஅறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

கட்டிட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சேகர் மற்றும் பாரதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும்முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து