பந்தில் பின்கழுத்தில் அடிவாங்கிய தவாண்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-2

Source: provided

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான 5-வது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் ஷிகர் தவாண் ஷாட் ஒன்றை ஆடும் போது பின் கழுத்தில் பந்து தாக்கியதில் நிலைதடுமாறினார்.

தென் ஆப்பிரிக்க பவுலர் பியூரன் ஹென்றிக்ஸ் வீசிய பந்து ஒன்றை பின்பக்கமாக ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார் ஷிகர் தவாண். ஆனால் பியுரன் ஹென்றிக்ஸ் தவாண் நகர நகர பந்தையும் அவரை நோக்கி நகர்த்தி லெந்தையும் குறுக்கினார். இதனால் சற்றே அதிர்ச்சியடைந்த தவாண், பந்திலிருந்து பார்வையை எடுத்து விட்டார். இதனையடுத்து பின் கழுத்தில் பந்து தாக்கியது.

இதனால் அவர் ஹெல்மெட்டை கழற்றி அந்த இடத்தைத் தேய்த்து கொண்டார். ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்திற்குள் உடற்கூறு மருத்துவர் வந்தார். ஷிகர் தவணுக்கு சிறிய சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து தவண் தன் இன்னிங்சை தொடர்ந்தார். 

இந்தியா ஏ அணி தொடரை ஏற்கெனவே கைப்பற்றியது. கடைசி 2 போட்டிகளுக்கு ஷிகர் தவண் இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டார். 4-வது போட்டியில் தவண் 52 ரன்கள் எடுத்தார் ஆனால் இந்தியா ஏ தோற்றுப் போனது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து