முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தின் பவுன்சர் யுக்தியால் ஆட்டம் என் கைக்குள் வந்தது ஸ்மித் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஹெட்டிங்லே : இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே பவுன்சராக வீசியதால், பந்து ஷாப்ட்டாகி ஆட்டம் என் கைக்குள் வந்தது என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஜாப்ரா ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை தாக்கியது.

இதனால் மூளையளற்சியால் பாதிக்கப்பட்ட ஸ்மித் 2-வது இன்னிங்சில் களம் இறங்கவில்லை. ஹெட்டிங்லேயில் நடைபெற்ற 3-வது டெஸ்டிலும் விளையாடவில்லை. அவரது உடல்நலம் சரியானதால் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு டெஸ்டில் களம் இறங்கினார். இந்த டெஸ்டில் ஸ்மித் இங்கிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வார் ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

தொடக்கத்தில் இருந்தே ஸ்மித்தை பவுன்சர் மூலம் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தினர். ஆனால், பொறுமை காத்த ஸ்மித் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டபுள் செஞ்சுரி அடித்தார். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பவுன்சர் யுக்திதான், ஆட்டம் என் கைக்குள் கொண்டு வந்தது என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில்,  நான் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு முன் அங்கே எனக்கு யாரெல்லாம் பந்து வீசுவார்கள். நான் எப்படி ரன் குவிப்பது.  பீல்டிங் நிலை எப்படி இருக்கும்.  என்னை அவர்கள் எந்த முறையில் அவுட்டாக்க நினைப்பார்கள்.  நான் எப்படி ரன்கள் குவிப்பது போன்ற எல்லாவற்றையும் கற்பனை செய்து பார்ப்பேன்.

அப்புறம் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய வந்த பின், அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னை தயார் படுத்திக் கொள்வேன். அவர்கள் என்னை பவுன்சர் மூலம் தாக்குதல் நடத்தி அவுட்டாக்க நினைத்தால், என்னை கிளீன் போல்டு மற்றும் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட்டாக்க முயற்சி செய்ய மாட்டார்கள் என்பதை நான் இந்த போட்டிக்கு முன்பே கூறியிருந்தேன். அவர்கள் அந்த மனநிலையுடன்தான் களம் இறங்கி, நான் சொன்னது போன்றே செய்தனர்.

குறிப்பாக புதிய பந்தில் இருந்தே, பந்தை நன்றாக பிட்ச் செய்து பவுன்சராக வீசினர். இதனால் பந்து விரைவாக ஷாப்ட் ஆகியது. அதன்பின் ஆட்டம் என் கைக்குள் வந்தது. எளிதாக ரன்கள் குவித்து டபுள் செஞ்சுரி அடித்தேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து