திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
trichy mukkompu water open 2019 09 08

திருச்சி : திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் சுற்றுலா மையம் மூடப்பட்டது.

காவிரி ஆற்றில் அதிகப்படியாக 40 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால், திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் இருந்து 3,000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் முக்கொம்பு சுற்றுலா மையத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், முக்கொம்பு பாலத்திலிருந்து வாத்தலை பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு கொள்ளிடத்தில் நீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து