பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
ramjethmalani 2019 09 08

புது டெல்லி : சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி காலமானார். அவருக்கு வயது 95. அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மகேஷ் ஜெத்மலானி வழக்கறிஞராக உள்ளார். மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். மற்றொரு மகள் ராணி ஜெத்மலானி ஏற்கெனவே மறைந்து விட்டார். கடந்த நில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தவாறே அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. வரும் 14-ம் தேதி ராம் ஜெத்மலானி தனது 96-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில் மறைந்தார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்த ராம்ஜெத்மலானி, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் அவர் மும்பைக்கு குடிபெயர்ந்த அவர்  வாஜ்பாய் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். ராம் ஜெத்மலானி 18 வயதிலேயே வழக்கறிஞரானார். அவர் 13 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். 17 வயதில் சட்டப்படிப்பை முடித்தார். அந்தக் காலத்தில் 21 வயதிலேயே வழக்கறிஞராக முடியும். ஆனால் ராம்ஜெத்மலானிக்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் 17 வயதிலேயே வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டது.

1959-ல் மகராஷ்டிரா அரசுக்கும் நானாவி என்ற தனிநபருக்கும் இடையேயான வழக்கே அவரின் முதல் வழக்கு. இந்த வழக்கு தேசமே கூர்ந்து கவனித்தது. ராம் ஜெத்மலானி 2ஜி உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து