ஜெத்மலானி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
jethmalani 2019 09 08

புது டெல்லி : மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியின் மறைவு வருத்தமளிக்கிறது. பொதுப் பிரச்சினைகளில் தனது கருத்தை தனக்கே உரித்தான பாணியில் தெரிவிப்பதில் வல்லவர். ஒரு சிறந்த வழக்கறிஞரை இந்த தேசம் இழந்து விட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ராம்ஜெத்மலானியுடன் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். அவர் மறைவு ஏற்படுத்தியுள்ள சோகமான தருணத்தில் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும்கூட அவருடைய பணிகள் என்றும் நிலைத்திருக்கும். ராம்ஜெத்மலானியுடைய சிறந்த பண்பே மனதில் தோன்றியதை மறைகாமல் பேசும் குணம். நெருக்கடி காலகட்டத்தில் அவர் மக்கள் உரிமைகளுக்காகப் போராடியவிதம் நினைவுகூரப்படும். தேவையுள்ளவர்களுக்கு உதவுவது அவருடைய இயல்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராம் ஜெத்மலானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், பின்னர், ராம் ஜெத்மலானியின் மறைவு ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடை சட்ட நிபுணத்துவம் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிரேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று கூறினார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ராம்ஜெத்மலானியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் கிரிமினல் சட்டத்தை செதுக்கியத்தில் அவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவர் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அவரின் பெயர் இந்திய சட்ட வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து