முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா அணைகளில் இருந்து 77,000 கன அடி காவிரி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபிணி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கே.ஆர்.எஸ்., கபிணி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக முழுமையாக நிரம்பின. இடையில் மழை நின்றிருந்தாலும் அணைகளுக்கு ஓரளவுக்கு நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக கேரளாவின் வயநாடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி, கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 55,774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 53,062 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 124.80 அடிக்கு நீர் முழுமையாக நிரம்பியுள்ளது. கே.ஆர்.எஸ்., கபிணி அணைகளில் இருந்து நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி தமிழகத்துக்கு மொத்தம் 77 ஆயிரத்து 420 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து