தெலுங்கானா அமைச்சரவை விரிவாக்கம் - 2 பெண்கள் உள்பட 6 பேர் பதவியேற்பு - பதவியேற்ற அன்றே பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழிசை

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
tamilisai sworn 2019 09 08

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்  கொண்டனர். அவர்களுக்கு நேற்று அம்மாநில புதிய கவர்னராக பதவியேற்றுக் கொண்ட தமிழிசை சவுந்திரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் 12 பேர் அமைச்சர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், இரு பெண்கள் உள்பட 6 பேர் நேற்று  புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஐதராபாத் நகரில் உள்ள ராஜ் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய அமைச்சர்களுக்கு  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், டி.ஹரிஷ் ராவ், சபிதா இந்திரா ரெட்டி, சத்தியவதி ரத்தோர், ஜி.கமலாக்கர் மற்றும் பி.அஜய் குமார் ஆகியோர் அம்மாநில முதல்வர்  சந்திரசேகர ராவ் முன்னிலையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான் பதவி பிரமானம் செய்து வைத்தார். தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்ற அன்றே 6 பேருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து