லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் முட்டைகளை வீசி பாக். போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      உலகம்
pak struggle london 2019 09 08

லண்டன் : • லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் பாகிஸ்தான்  முட்டைகளை வீசி போராட்டம் நடத்தினர். இதனால் தூதரகத்தை சுத்தம் செய்யும் பணியில் இந்தியர்கள் ஈடுபட்டுள்னர்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்திய அரசு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் உள்ள இந்தியர்கள், சுதந்திர தினத்தை கொண்டாடியபோது, பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு லண்டன் மேயர் சாதிக் கான் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த 3-ம் தேதி, இரண்டாவது முறையாக இந்திய தூதரகம் மீது முட்டைகள், அழுகிய தக்காளிகள், கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியா தூதர் ருச்சி கன்ஷியாமுடன் தூதரகம் முன் திரண்ட இந்தியர்கள், துடைப்பம் உள்ளிட்டவற்றை கொண்டு தூதரகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூதரகம் முன் போராட்டம் நடத்தியவர்களை சி.சி.டி.வி. காட்சி வைத்து மெட்ரோபாலிட்டன் போலீசார் தேடி வரும் நிலையில், இதுகுறித்து பதிலளித்த தூதர் கன்ஷியாம், இதுபோன்ற அச்சுறுத்தலை கண்டு இந்தியர்கள் பயப்பட மாட்டோம் என தெரிவித்தார். தங்களை வெறுப்போருக்கு இந்தியா எப்போதும் அன்பை மட்டுமே வழங்கும் என கூறியிருந்தார். இதனிடையே கடந்த 3-ம் தேதி நடந்த போராட்டத்தை போல், பாகிஸ்தானியர்கள் வருகிற 14-ம் தேதியும் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும், டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து