முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கம்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. 

காஷ்மீரில் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தொடர்ந்து இந்திய அரசு மீது குற்றம்சாட்டும் பாகிஸ்தான், தனது நாட்டில் எந்த சலனமும் இன்றி இணையதள சேவையை துண்டித்துள்ளது. 

மொகரம் பண்டிகை இன்று  கொண்டாடப்பட உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள்   மொபைல் சேவை துண்டிக்கப்படுவதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மொகரம் பண்டிகையையொட்டி நடைபெறும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து