ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 27-ம் தேதி மோடி பேசுகிறார்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      உலகம்
modi speak UN 2019 09 09

நியூயார்க் : நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில்  வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றவுள்ளார். 

நியூயார்க்கில்  27-ம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுச்சபையின் 74வது அமர்வின் (யு.என்.ஜி.ஏ) பொது விவாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி,  27-ந்தேதி காலையில் உயர்மட்ட அமர்வில் மோடி உரையாற்றுகிறார். 

2014ல் ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் தனது முதல் உரையை நிகழ்த்தி இருந்தார். மேலும் நியூயார்க்கில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

பேச்சாளர்களின் பட்டியலின் படி, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் செப்டம்பர் 27-ம் தேதி அன்று உலகளாவிய தலைவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். மோடியின் உரைக்கு பின்னர் இம்ரான் கான் உரையாற்றுகிறார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து