அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும்: சிவதாணு பிள்ளை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      இந்தியா
Shivathanu Pillai 2019 09 09

புதுடெல்லி : அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.  

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

கதிரியக்கமற்ற ஹீலியம்-3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அமைக்கும். மேலும் இது அடுத்த 10 ஆண்டுகளில் நடக்கும். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை 4 நாடுகள் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றுள் நம்முடைய தேசமும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து