முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதாவரி நதியில் பயங்கர வெள்ளம்: கரையோர மக்கள் வெளியேற 2-வது முறையாக எச்சரிக்கை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : ஆந்திராவில் கோதாவரியில் பயங்கரப் பாய்ச்சலோடு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் வெளியேறுமாறு நேற்று இரண்டாவது முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோதாவரி நதியில் வெள்ள ஓட்டம் 14 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் நதி பெருக்கெடுத்து பாய்ந்தோடத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த தோவலேஸ்வரத்தில் சர் ஆர்தர் காட்டன் தடுப்பணை அதிகாரிகள் கூறுகையில், ''கோதாவரி நதியில் வெள்ள ஓட்டம் 14 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் வெள்ளநீர் ஓட்டத்தின் தன்மை கடுமையாக இருக்கும். நதியின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு  முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், சிலர் கிராமங்களை விட்டு வெளியேறாத நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை எச்சரிக்கை சிக்னல் தற்போது  விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ள நீரின் ஓட்டம் குறைய வாய்ப்ப்பில்லை. தடுப்பணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து வெள்ள நீரோட்டம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் மக்கள் உரிய பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து