வெளிநாட்டு பயிற்சியாளரின் யோசனையால் எனது ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்தேன் - பி.வி. சிந்து

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      விளையாட்டு
PV Sindhu 2019 08 07

புதுடெல்லி : வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் (தென்கொரியா) யோசனைப்படி எனது ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்தேன். அது மிகவும் உதவிகரமாக இருந்தது என்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மும்பையில் தனியார் நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சிந்து கூறுகையில், வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹியன் (தென்கொரியா) வந்த பிறகு அவரது யோசனைப்படி எனது ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்தேன். அது மிகவும் உதவிகரமாக இருந்தது. இதே போல் கோபிசந்தின் (தேசிய பயிற்சியாளர்) வழிகாட்டுதலும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் எனது ஆட்டத்திறனில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து