வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியது - இதற்கு முன்பு நடந்ததில்லை என்று நினைக்கிறேன் :ரவிசாஸ்திரி

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      விளையாட்டு
ravi shastri-kohli 2019 09 09

புதுடெல்லி : வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியது. இதற்கு முன்பு நடந்ததில்லை  என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியது. ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்தியா தொடரை சிறப்பாக முடித்தது.சிறப்பாக விளையாடிய இந்திய அணியை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், இதுபோன்று இதற்கு முன் நடந்தது கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை என்று நினைக்கிறேன். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கடந்த காலங்களில் இப்படி நடந்ததாக நான் நினைக்கவில்லை. வரும் காலத்தில் இதுபோன்று எளிதாக நடக்கும் என்றும் நினைக்கவில்லை. என்று கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து