தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்; ராணுவ கமாண்டர் தகவல்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      தமிழகம்
sourthern army commander 2019 09 09

சென்னை : தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியுள்ளார்.

குஜராத்தின் சர்க் கிரீக் பகுதியில் கேட்பாரற்று கிடந்த படகுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்று தகவல் கிடைத்து உள்ளது என தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியுள்ளார்.

மேற்கிந்திய பகுதிகளிலோ, தென்னிந்திய பகுதிகளிலோ பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. பயங்கரவாத செயல்கள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து