நேரு பல்கலை. மாணவி ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பு - டெல்லி கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      இந்தியா
Sheila rajit 2019 09 10

புது டெல்லி : தேசதுரோக வழக்கில் டெல்லி மாணவி ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷீலா ரஷீத் ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கடந்த மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் தலைவராகவும், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வரும் இவரை, பலர் டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சமூக வலைதளங்களில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் எதிராக இவர் கருத்து பதிவிட்டு வருவதாகவும், இவர் செய்து வருவது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 3- ம் தேதி ஷீலா ரஷீத் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பட்டியாலா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார், ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஷீலா ரஷீத் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து ஷீலா ரஷீத் கூறிய கருத்தை ஆதாரமற்றது என்று கூறி இந்திய ராணுவம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து