தேசிய குடியுரிமை பதிவேட்டை பெங்காலில் கொண்டு வர அனுமதிக்க முடியாது: மம்தா

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      இந்தியா
mamta speech 2019 06 19

கொல்கத்தா : தேசிய குடியுரிமை பதிவேட்டை பெங்காலில் கொண்டு வர அனுமதிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற பெயரில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய குடியுரிமை பதிவேட்டை பெங்காலில் கொண்டு வர அனுமதிக்க முடியாது. மதம் மற்றும் ஜாதி வாரியாக மக்களை பிரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அசாம் தேசிய குடியுரிமை பதிவேட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. போலீசாரை கொண்டு அசாம் மக்களை அமைதியாக வைத்துள்ளனர். ஆனால் பெங்காலில் அப்படி நடக்க விட  மாட்டோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து