தமிழில் இல்லாத உங்கள் பெயரை முதலில் மாற்றுங்கள்: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      தமிழகம்
jayakumar 01-09-2018

முதலில் தமிழில் இல்லாத உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழை வளர்ப்பது என்பது அரசின் தலையாய கடமை. தமிழ் மொழிக்கு எந்த காலத்திலும் அழிவு கிடையாது. பல கால கட்டத்தில் பல்வேறு படை எடுப்புகள் வந்தது. தமிழ் மொழி அழிந்து போய் விட்டதா?. தமிழ் மொழிக்கு பேராபத்து தி.மு.க.தான். குறிப்பாக ஸ்டாலின் குடும்பம்தான் தமிழுக்கு பேராபத்து. அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஸ்டாலின் முதலில் அவர் பெயரை தமிழில் வைத்துள்ளாரா? முதலில் நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர் நடத்தும் பள்ளியின் பெயர் தமிழில் உள்ளதா? .அவர்கள் நடத்தும் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா? இந்தியையும், ஆங்கிலத்தையும் வளர்க்கிறார்கள். அவர்கள் நடத்தும் சன் டி.வி. என்பது ஆங்கில பெயரில்தான் உள்ளது. முதலில் தனது பெயரை இவர் மாற்ற வேண்டும். ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?.நிறைய தமிழ் பெயர்கள் உள்ளது. எனவே அவர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதனை தமிழக மக்கள் நிச்சயமாக பாராட்டுவார்கள். நான் வேண்டுமானால் ஒரு பெயர் குறித்த ஆலோசனையை தருகிறேன். செம்புல புலநீராய் புலவர் பெயர். இதனை வைத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கும் காலத்தால் வாழக்கூடியவர்.
இவ்வாறு தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து