டோனியின் ஓய்வை சூசகமாக அறிவித்தார் விராட் கோலி?

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      விளையாட்டு
virat kohli-dhoni 2019 09 12

மும்பை, : டோனியுடன் விளையாடிய முக்கியமான ஆட்டத்தை  கோலி ஸ்பெஷல் நைட் என டுவிட்டரில் நினைவு கூர்ந்ததால், ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய மில்லேனியம் கேள்வியாக உள்ளது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த போது கடும் விமர்சனத்திற்குள்ளானார் டோனி. அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடரில் டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.  இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், டோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர். அந்த போட்டியை நினைவு கூர்ந்து கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓட வைத்தார் என பதிவிட்டுள்ளார். டோனியுடனான முக்கியமா நிகழ்வை கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து