போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் சாவு:

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      தேனி
16 bodi accident

போடி,  -    போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள் கிழமை தோட்டத் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் இறந்து போனார்கள். 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
     போடி அருகே பண்ணைத்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் தோட்டத் தொழிலாளர்களை கேரளத்துக்கு கூலி வேலைக்கு அழைத்து செல்லும் கங்காணி வேலை பார்த்து வருகிறார். இவர் தலைமையில் பண்ணைத்தோப்பு, தோப்புப்பட்டி, போடி ஆகிய ஊர்களை சேர்ந்த 21 பெண்களை கேரள மாநிலம் பி.எல்.ராவ் என்ற இடத்தில் ஏலத் தோட்டத்திற்கு கூலி வேலைக்காக அழைத்து சென்றுள்ளார்.
     பிற்பகலில் வேலை முடிந்து 21 பெண்கள் மற்றும் கண்ணன் உட்பட 22 பேர் ஒரே ஜீப்பில் போடி நோக்கி வந்துள்ளனர். ஜீப்பை கேரள மாநிலம் பி.எல்.ராம் ஊரைச் சேர்ந்த முகேஷ்ராஜன் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ஜீப் போடிமெட்டு மலைச்சாலையில் காற்றுத் தூக்கி பாறை என்ற பிஸ்கட் பாறை அருகே வந்தபோது டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய ஜீப் 200 அடி பள்ளத்தில் உருண்டது.
       இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. விபத்தில் ஜீப்பில் சென்ற கண்ணன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் பண்ணைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னத்தாய் (22), பரமேஸ்வரி (24), ராணி (42), தமிழ்ச்செல்வி (30), உமா (26), பாப்பா (59), தனலட்சுமி (42), போதுமணி (48), பஞ்சவர்ணம் (52), நூர்ஜஹான் (48), போதுமணி (38),  தோப்புபட்டியை சேர்ந்த பாப்பா (45), அபிநயா (16), ஆனந்தி (16), சந்திரலேகா (38), பானு (27), போடியை சேர்ந்த காமாயி (65) அழகுபிள்ளை (36), பிச்சைகனி (37), மாரியம்மாள் (43) முந்தல் கிராமத்தை சேர்ந்த அன்னக்கிளி (68) மற்றும் ஓட்டுநர் முகேஷ்ராஜன் ஆகிய 22 பேர் பலத்த காயமடைந்தனர்.
     இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு தனலட்சுமி (42) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போடி குரங்கணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து