முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே தன்னுடைய சிறப்பு வாய்ந்த பவுன்சர்கள் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். குறிப்பாக ஸ்மித்திற்கு வீசிய எதிர்பாராத பவுன்சர், ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை தாக்கியது. இதனால் மூன்று இன்னிங்சில் விளையாட முடியாத நிலை ஸ்மித்திற்கு ஏற்பட்டது.

3-வது டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் vs ஜாப்ரா ஆர்சர் என்ற முறையிலேயே ஆஷஸ் தொடர் சென்றது. நான்கு டெஸ்டில் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை ஆர்சர் பெற்றுள்ளார் என ஸ்மித் தெரிவித்துள்ளார். ஸ்மித் இதுகுறித்து கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜாப்ரா ஆர்சரை பார்த்தேன். மிகவும் சிறப்பான திறமை அவரிடம் இருப்பதாக உணர்ந்தேன். அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து