முதல் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸ்: இந்தியா 323/4-க்கு டிக்ளேர்: தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்கு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      விளையாட்டு
india declarre 2019 10 05

விசாகப்பட்டினம் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மயங்க் அகர்வால் இரட்டை சதமும் (215 ரன்), ரோகித் சர்மா சதமும் (176 ரன்) விளாசினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது தென்ஆப்பிரிக்கா.

3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளுக்கு 385 ரன்கள் சேர்த்து இருந்தது. நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், 431 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பின் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்த பொழுது ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த அணி 4 ரன்கள் எடுத்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் எல்கார் 3 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அந்த அணியினர் விளையாடினர். இதில் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மர்க்ராம் (3), டே புரூயின் (5) ரன்கள் எடுத்துள்ளனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து