முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்கிறார் துருக்கி அதிபர்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

இட்லிப் : அமெரிக்கா ஆதரவளிக்கும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தும் என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும் போது,

எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்கா ஆதரவளிக்கும் சிரிய ஜனநாயகப் படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதல் தரை வழியாகவும், வான்வழியாகவும் இருக்கலாம். எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் என்று கருதும் தீவிரவாதக் குழுக்களை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இது தொடர்பான பணிக்குத் தயாராகி வருகிறோம் என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து