முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வந்த ஷேக் ஹசீனாவுடன் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இருநாட்டு தலைவர்கள் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் திட்டம் உள்ளிட்ட 3 முக்கிய திட்டங்களை ஷேக் ஹசினாவும் பிரதமர் மோடியும் தொடங்கி வைத்தனர். பின்னர், நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் ஷேக் ஹசினா சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் நேற்று ஷேக் ஹசினாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, தனிப்பட்ட இழப்பு மற்றும் துயரத்தில் இருந்து மீண்டும் வரக் கூடிய ஷேக் ஹசினாவின் பலமும் நெஞ்சுரமும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தீரமாகவும் கடுமையாகவும் போராடும் அவரது விடாமுயற்சியும் எனக்கான மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்து வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து