சீன ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      விளையாட்டு
Naomi Osaka final 2019 10 06

பெய்ஜிங் : சீன ஓபன் டென்னிஸ் போட்டி பெய்ஜிங்கில் நடந்து வருகிறது.

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பெய்ஜிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கியை (டென்மார்க்) சந்தித்தார். இதில் நவோமி ஒசாகா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் வோஸ்னியாக்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 3-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து