2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹாரி வழக்கு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      உலகம்
 Prince Harry 2019 10 08

லண்டன் : தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக கூறி தி சன் மற்றும் டெய்லி மிரர் ஆகிய 2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசி மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அனுமதியில்லாமல் வெளியிட்டது தொடர்பாக மெயில் ஆன் சண்டே என்ற பத்திரிகையின் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பேசிய இளவரசர் ஹாரி, தனது தாயார் டயானாவை போல் மனைவி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக கூறி தி சன் மற்றும் டெய்லி மிரர் ஆகிய 2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹாரி வழக்கு தொடர்ந்துள்ளார். எனினும் இதற்கான ஆதாரங்களையோ, என்ன மாதிரியான உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்களையோ பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவிக்க மறுத்து விட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து