விஜயதசமி மற்றும் நவராத்திரி பண்டிகை - கவர்னருக்கு முதல்வர் இ.பி.எஸ் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 12

சென்னை : விஜயதசமி மற்றும் நவராத்திரி பண்டிகையையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னருக்கு மலர்க்கொத்துக்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,விஜயதசமி திருநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்துடன் நவராத்திரி மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம்அனுப்பினார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

உற்சாகமிக்க இந்த விஜயதசமி திருநாளில் உங்களுக்கும், மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான பண்டிகை நாள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், உங்கள் முயற்சிகளில் அனைத்திலும் முன்னேற்றத்தையும், வெற்றியையும் வழங்கட்டும் என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். தனக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னருக்கு நன்றி தெரிவித்ததோடு, விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டார்.

துணை முதல்வரும் வாழ்த்து

இதே போல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விஜயதசமி, நவராத்திரி பண்டிகையையொட்டி கவர்னருக்கு மலர்கொத்துக்களை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழக கவர்னரும் பதில் வாழ்த்து கடிதம் அனுப்பினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து