முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி - காலிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

உலன் உடே : 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ உடல் எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6 முறை சாம்பியனான இந்தியாவின் மேரி கோம், தாய்லாந்து வீராங்கனை ஜுதாமா ஜிட்பாங்குடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேரிகோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மேரி கோம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து