புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி தமிழ் தலைவாசுக்கு ஆறுதல் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      விளையாட்டு
Tamil Thalaivas win 2019 10 08

நொய்டா : புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி.
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 127-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் அந்த அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 19-14 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், 35 - 33 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் அணி. ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்டஸ் அணி 48 - 38 என்ற புள்ளி கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து