அசாருதீன் மகனுக்கும் எனது சகோதரி அனம் மிர்சாவுக்கும் டிசம்பரில் திருமணம்: சானியா மிர்சா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      விளையாட்டு
sania and sister 2019 10 08

ஐதராபாத் : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் தனது சகோதரி சனம் மிர்சாவிற்கும் டிசம்பரில் திருமணம் நடக்கவிருப்பதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரியும், ஆடை வடிமைப்பாளருமான அனம் மிர்சா வரும் டிசம்பர் மாதம் முகமது அசாதுதீன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனின் மகன் ஆவார். இந்த தகவலை சானியா மிர்சா ஒரு பேட்டியின் போது கூறினார்.

அனம் மிர்சா மற்றும் அசாதுதீன் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையதளத்தில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது திருமணம் குறித்த விவரங்களை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து