காங்கிரசின் தற்போதைய நிலை குறித்து சல்மான் குர்ஷித் கவலை

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      இந்தியா
Salman Khurshid 2019 10 09

புது டெல்லி : காங்கிரசின் தற்போதைய நிலை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரசின் தற்போதைய நிலைமை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது; பழம்பெரும் கட்சியான காங்கிரசின் தற்போதைய நிலை குறித்து கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறினார்.

பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் ராகுல் காந்தி, தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது இந்த நடவடிக்கையால் கட்சிக்குள் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் முடிவை தாங்கள் மதிப்பதாகவும், அதே நேரத்தில், நெருக்கடியான சூழலில் கட்சி இருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் ஊட்ட சில நடவடிக்கைளை எடுத்தாக வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இல்லாத போதிலும் கட்சியின் முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர். கட்சி தற்போதைய நிலைக்கு சென்றதற்கான காரணத்தை அறிந்து நடவடிககை எடுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து முறையாக ஆலோசிக்கப்படவில்லை. இதே போக்கு தொடர்ந்து நீடித்தால் காங்கிரஸ் கட்சி கடுமையான தள்ளாட்டத்திற்கு தள்ளப்படுவதோடு, வரவிருக்கும், மகராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து