முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-வது பொருளாதார கணக்கெடுப்பு - தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று தொடங்கி வைத்தார்.

கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 6 முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 7-வது முறையாக தற்போது டிஜிட்டல் முறையில் பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பில் 33,000 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 5000 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் மூன்று மாதங்கள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் குறித்தும் அவற்றால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கனரக, ஆட்டோமொபையில் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு காரணமாக தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேலை நாட்களை குறைத்து கொண்டது. இந்த சூழலில் நாட்டில் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை, அதாவது கிராமங்களில் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில், வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்துறைகள் போன்றவற்றை கணக்கெடுக்க மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து