முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவிப்பு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத  அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.16,000 கோடி செலவாகும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்றும், தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பினை செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி கடந்த பிப்ரவரி மாதம் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து