பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      விளையாட்டு
World Boxing Indian woman to progress 2019 10 09

உலன் உடே : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜமுனா போரா 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ உடல் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஜமுனா போரா, அல்ஜீரியா வீராங்கனை ஒயிடாட் போவுடன் மோதினார். முதலில் புள்ளிகளை விட்டுக் கொடுத்த ஜமுனா போரா, இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் ஜமுனா போரா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பெண்கள் உலக குத்துச்சண்டை காலிறுதிச் சுற்றில் மேரி கோம், ஜமுனா போரா மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து