காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்ட பாண்ட்யா

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      விளையாட்டு
pandya video 2019 10 09

புது டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கு பிறகு முதுகின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் அவருக்கு ஆபரேஷன் செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று சிபாரிசு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து லண்டன் சென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 4-ம் தேதி ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான உடற்பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் நடந்து இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிகிறது.

எனினும், ஹர்திக் காயத்தில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி வீடியோ பதிவு ஒன்றை அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில், சிறு குழந்தையின் நடைகள். ஆனால் முழு உடற்தகுதிக்கான எனது பயணம் இங்கிருந்தே தொடங்குகிறது. எனக்கு ஆதரவாக இருந்த மற்றும் நான் நலம் பெற விரும்பிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார். ஏற்கனவே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் ஹர்திக் தேர்வு செய்யப்படவில்லை. வருகிற நவம்பர் 3-ம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள வங்காளதேச அணிக்கு எதிரான சர்வதேச 20 ஓவர் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து