ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சித்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      இந்தியா
Amit Shah 2019 08 11

புது டெல்லி : ரபேல் விமானத்துக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பூஜை செய்த விவகாரத்தில் அதை விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்று அங்கு முதல் ரபேல் போர் விமானத்தை பெற்று கொண்டார். முன்னதாக ரபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் சாஸ்திர பூஜை செய்தார். ரபேல் விமானத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று இந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார். ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும் போது, ரபேல் விமானத்தை வைத்து மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. இது போன்ற தமாசு தேவையில்லை. போபர்ஸ் போன்ற பீரங்கிகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற நேரில் சென்று அமைச்சர்கள் வாங்கியதில்லை. இதுபோன்ற பூஜை எதுவும் செய்ததில்லை. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். 

அரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர்அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சில் ரபேலின் சாஸ்திரா பூஜை நடத்தினார். காங்கிரஸ் அதை விரும்பவில்லை. விஜயதசமியில் சாஸ்திரா பூஜை செய்யப்படவில்லையா? எதை விமர்சிக்க வேண்டும். எது செய்யக்கூடாது என்று அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து