எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இதயம் என் இதயத்தை தொட்டது என்றும் இயலும் இசையும் இணைந்தது என்றும் இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருபெரும் சாதனை ஜாம்பாவான்களாக கருதப்படுபவர்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக பேசாமல் இருந்த நிலையில் நேற்று ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
அன்னக்கிளி என்ற தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதுமுதற்கொண்டு அவரது இசை ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது. அப்போது கிராமத்து வாசனையுன் எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் இனிமையானவை. 1970, 80 காலகட்டங்களில் இளையராஜா - பாரதிராஜா கூட்டணி ராஜ கூட்டணியாக வலம் வந்தது. பாரதிராஜா படம் என்றால் இளையராஜா இசை என எழுதி வைத்துக் கொள்ளலாம் என சொல்லும் அளவிற்கு இணைந்து ஹிட் கொடுத்தனர். இருவரது கூட்டணியில் உருவான படங்களில் இடம்பெற்ற இசை மற்றும் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத காவியம். 1992-ம் ஆண்டு வெளியான நாடோடித் தென்றல் திரைப்படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இந்த கூட்டணி விலகியது. இருவரும் பேசிக்கொள்வதையும் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் நீண்ட காலம் பேசாமல் இருந்த இருவரும் நேற்று திடீரென சந்தித்து அன்பையும், நட்பையும் பரிமாறிக்கொண்டனர். இயலும், இசையும் இணைந்தது, இதயம் என் இதயத்தை தொட்டது என பாரதிராஜா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இருபெரும் ஜாம்பாவான்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது தமிழ் சினிமா ரசிகர்களையும் , சினிமா நட்சத்திரங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


