புதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      தமிழகம்
collector greet CM Edapadi 2019 11 16

சென்னை : புதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், வேலூர் மாவட்டத்தை பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களையும் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும் விழுப்புரம் மாவட்டத்தை புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டமும் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் 110 -வது விதியின் கீழ் அறிவித்தார். புதிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட கலெக்டர்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதிதாக அமைக்கப்பட இருக்கும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் எஸ். திவ்யதர்ஷினி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஜான்லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் எம்.பி.சிவன் அருள் ஆகியோரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர் இவர்களுடன் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் எம். கோவிந்தராவும் வாழ்த்து பெற்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து