டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ரூ.75 லட்சம் - தமிழக அரசு சார்பில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi cheque issue filmfestival 2019 11 18

சென்னை : டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ள சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரைப்படத்துறையினரிடம் வழங்கினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திட 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார்.

அந்த வகையில், சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான தங்கராஜிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினர் லிசி லஷ்மி, பூர்ணிமா பாக்யராஜ், சைலஜா, சாக்ஷி அகர்வால், மோகன், மோகன் ராம், தங்கராஜ், எஸ்.முரளி, மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து