பிரதமர் மோடியுடன் ஸ்வீடன் அரசி தம்பதிகள் சந்திப்பு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      இந்தியா
Swedish royal couple meet pm modi 2019 12 02

புதுடெல்லி : இந்தியா வந்துள்ள ஸ்வீடன் நாட்டு மன்னர் மற்றும் அரசி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஸ்வீடன் நாட்டு மன்னர் 16 - ம் கார்ல் கஸ்டப் மற்றும் அரசி சில்வியா ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். நேற்று காலை டெல்லி வந்த அரச தம்பதிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்வீடன் அரச தம்பதிகள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் விருந்தினர் இல்லத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். ‘இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அரச தம்பதிகள் பிரதமருடன் கலந்துரையாடினர். இந்தியாவிற்கும் சுவீடனுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்பு மற்றும் ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை, சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் சட்டத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அரசியல், வணிக, அறிவியல் மற்றும் கல்வித் துறைகளில் வழக்கமான தொடர்புகள் நமது இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளன’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அரச தம்பதியர் சந்தித்தனர். முன்னதாக, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து