முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் நாட்டவருக்கு விசா டோர் டெலிவரி வசதி - அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தானில் உள்ளவர்கள் அமெரிக்க விசா பெறும் போது நேரில் செல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வசதியை அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டில், பாகிஸ்தானியர்கள் தங்கள் அமெரிக்க விசாவை தங்கள் வீட்டு வாசலில் பெறுவதற்கான வசதியைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த சேவை விசா பெற விரும்புவோரின் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அதற்கான விநியோக கட்டணத்துடன் நடைமுறைக்கு வருவதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

உங்கள் அமெரிக்க விசாவிற்கு விருப்பமான வீட்டு விநியோக சேவையை நாங்கள் இப்போது வழங்குகிறோம். பி.கே.ஆர் 700 கட்டணத்தை செலுத்தினால் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாவை எந்த பாகிஸ்தான் முகவரிக்கும் அனுப்புவோம். இந்த புதிய சேவையைப் பயன்படுத்த, விண்ணப்பச் செயல்பாட்டின் போது பிரீமியம் டெலிவரி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து