பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      தமிழகம்
admk joined parties CM 2019 12 06

தி.மு.க, அ.ம.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1,100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

 
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சின்னசோரகை பகுதியிலிருந்து தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச்  சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரும், வீரபாண்டி ஒன்றியத்திலிருந்து தி.மு.க-வைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரும், ஏற்காடு, அயோத்தியாப்பட்டினம், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மற்றும் கருமந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து தி.மு.க, அ.ம.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோரும் என மொத்தம் 1,100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து  தங்களுடைய பழைய கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளை ஒப்படைத்து விட்டு, அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் செம்மலை எம்.எல்.ஏ., சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், என்.சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.மனோன்மணி,  எஸ்.ராஜா, ஆர்.எம்.சின்னதம்பி, அ.மருதமுத்து, கு.சித்ரா உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து