தெலுங்கானா என்கவுன்ட்டரை பாராட்டி சாய்னா நேவால் டுவீட்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      விளையாட்டு
SPORTS-1 2019 12 06

Source: provided

மும்பை : தெலுங்கானா பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதற்காக ஐதராபாத் போலீஸாருக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறந்த வேலை. சல்யூட் ஐதராபாத் போலீஸ் என டுவீட் செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். மாயாவதி, உமா பாரதி போன்று பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களுமே கூட தங்களின் பாராட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து