சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      விளையாட்டு
SPORTS-3 2019 12 06

Source: provided

சென்னை : சென்னையில் நடைபெறும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை  தொடங்குகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர்  தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடர் முடிவடைந்த பின்னர், டிசம்பர் 15-ம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் தொடங்குகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (டிசம்பர் 8-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ. 1200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ, 6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து