முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி 20: அஸ்வினின் சாதனையை 35 போட்டிகளில் சமன் செய்த சகால்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புது டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அஸ்வினின் சாதனையை சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சகால் 35 போட்டிகளிலேயே சமன் செய்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில்  விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி ஐதராபாத் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்  இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ்  அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.  இறுதியில் கேப்டன் விராட் கோலியின் 94 ரன்களுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சகால் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள்  கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் குறுகிய காலத்தில் அதிவேக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் சுழற்பந்து  வீச்சாளர் அஸ்வினின் சாதனையை அவர் சமன் செய்தார்.    முன்னதாக இந்திய வீரர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகள் எடுத்ததே குறுகிய காலத்தில் அதிவேகமாக  வீழ்த்திய விக்கெட்டுகள் சாதனையாக இருந்தது. 

ஆனால், நேற்று முன்தினம் தனது 35-வது போட்டியில் விளையாடிய யுசுவேந்திர சகால் 2வது விக்கெட் வீழ்த்திய போது 52 விக்கெட்டுகள்  வீழ்த்திய அஸ்வினின் சாதனையை சமன் செய்தார். நேற்று முன்தின ஆட்டத்தின் 18-வது ஓவரை வீசிய சகால் அதே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஜெட் வேக ரன்னிற்கு முட்டுக்கட்டை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து