எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 9 புதிய மாவட்டங்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட், கடந்த 6-ம் தேதி வழங்கிய ஆணையின்படி தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு வேலூர் , திருப்பத்தூர் , ராணிபேட்டை , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும். நாளை காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் துவங்கும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91, 975 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெறும். இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும். கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட போராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.
முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 38, 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், பிரிதொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இத்தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவில் 24,680 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 25,008 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . வாக்காளர்கள் - சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை ( data base ) கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது .
இத்தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்து 778 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 528 பெண் வாக்காளர்களும், 1,635 முன்றாம் பாலின வாக்காளர்களும் என ஆக மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே முப்பது லட்சம் வாக்காளர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே இருபத்து எட்டு லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சித் தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13,062 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் தமார் 4,02,195 அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவியிடங்களைத் தவிர்த்து ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவிற்கு சுமார் 1,83,959 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான்கு பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதனை ஒரு முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்த உள்ளது .
தேர்தல் பார்வையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ( IAS ) ஒருவர் விதம் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர். மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் - 27, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடங்கள் - 27, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள் - 314, ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் பதவியிடங்கள்- 314, கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள்- 9,624 என மொத்தம் 10 ஆயிரத்து 306 பதவியிடங்களுக்கு மறைமுகத்தேர்தல் நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிகள் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடத்தை விதிகள் தொடரும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் அட்டவணை:-
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்:- 9.12.2019
மனு தாக்கல் செய்ய கடைசிநாள்:- 16.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை:- 17.12.2019
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்:- 19.12.2019
முதல் கட்ட வாக்குப்பதிவு- 27.12.2019
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு- 30.12.2019
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்:- ஜனவரி. 02
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள்:- ஜனவரி. 04
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நில
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
01 Jul 2025சென்னை : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்&n
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.