முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல் செய்தார்.  

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும் இணையதள சேவை இன்னும் வழங்கப்படாததுடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 

இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய-அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனநாயக கட்சி எம்.பி.யான பிரமிளா, குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் வாட்கின்ஸ் எம்.பி.யுடன் சேர்ந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் போராடுபவர்களுக்கு எதிராக அதிக படைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், அனைத்து மக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தடுப்புக்காவலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு போடும் விதிமுறைகளுக்கும் அந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானம் மிகவும் எளிமையானது என்றும், இது செனட் சபைக்கு அனுப்பப்படாது எனவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர். மேலும் இதன் மீது வாக்கெடுப்பும் நடத்த முடியாது.

முன்னதாக இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யக்கூடாது எனக்கோரி பிரமிளாவின் வீட்டு முன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக அவருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-மெயில்களும் அனுப்பப்பட்டன. எம்.பி. பிரமிளா ஜெயபால், சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து